புதுடெல்லி: 79வது சுதந்திர தின விழா முன்னிட்டு இன்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றினார். அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூரின் மூலம் துணிச்சலான வீரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு வணக்கம் செலுத்த கடமைப் பட்டுள்ளேன். கற்பனையிலும் எட்டாத வகையில் வீரர்கள் எதிரிகளை முறியடித்தனர்.
ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றனர். இந்த சீற்றத்தின் வெளிப்பாடாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. இரண்டாம் தேதிக்கு பிறகு ஆயுதப்படைகளின் சுதந்திரம் கொடுத்துள்ளோம். ஆபரேஷன் சிந்து மூலம் எதிரி மண்ணுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கினோம்.
இது பாகிஸ்தானின் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு செயல்பட்ட வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். பத்து ஆண்டுகளாக நடைபெறாத நிகழ்வுகளை வீரர்கள் நடத்திக் காட்டி உள்ளனர். அப்பாவை மக்களின் மதத்தை கேட்டுக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணு ஆயுதம் மிரட்டலுக்கு இந்தியா எப்போதும் தலை வணங்காது. இந்தியாவின் புதிய பிரதிபலிப்பாக ஆபரேஷன் சிந்துர் உள்ளது.
எதிரிகள் மீண்டும் முயற்சித்தால் தாக்குதல் எங்கு எப்போது நடைபெறும் என்று ராணுவ படை வீரர்கள் தீர்மானிப்பார்கள். சிந்து நதி நீர் குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது. அதேபோல் சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்த இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு.
கண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையில் ஒப்பந்தத்தை ஏற்க இயலாது. எதிரிகளுக்கு நம் மண்ணிலிருந்து தண்ணீர் செல்லக்கூடாது அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம் என்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உரையாற்றினார் நரேந்திர மோடி.