சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசு இவ்வளவு தானா?? வெளியான முழு விவரம்!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசு இவ்வளவு தானா

CRICKET : இந்த மாதம் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசுத்தொகையின் முழு விவரம் வெளியாகி உள்ளது.

இந்திய அணி தற்போது சமீபத்தில் இங்கிலாந்து அணி உடனான ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கலந்துகொண்டு அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசுத்தொகையின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட், சுரேஷ் ஐயர் ஆகியோரின் சம்பளத்தை விட குறைவாக உள்ளதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்த முறை நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.19.45 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியடையும் அணிக்கு ரூ. 9.72 கோடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல அரை இறுதி வரை முன்னேறிய அணிகளுக்கு ரூ 4.86 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகையானது ரூ.59 கோடி.

இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும் ஸ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கும் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதோட ஒப்பிடும்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெறும் அணியின் பரிசுத்தொகையானது இந்த முக்கிய மூன்று வீரர்கள் சம்பளத்தை விட குறைவாக உள்ளதாக கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசுத்தொகையை விட இந்த முறை நடைபெறும் தொடரின் பரிசுத்தொகையானது 53 சதவீதம் அதிகம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram