புதுடெல்லி: சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் காணொளி மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எழுத்தறிவு என்பது வாசிப்பு எழுதுதல் ஆகியவற்றை தாண்டி உள்ளது. எழுத்தறிவு கண்ணியம் அதிகாரம் அளித்தல் மற்றும் தன்னம்பிக்கைக்கு முக்கிய வழியாகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம் தற்போது 2023 – 24 ஆம் ஆண்டில் 80.9% அதிகரித்துள்ளது. தற்போது அனைவரும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்றனர்.
கடந்த 13 ஆண்டுகளில் இருந்த எழுத்தறிவு விகிதமானது ஏறத்தாழ 81 % எட்டியுள்ளது என்று பேசினார். ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுத்தறிவு எதார்த்தமாக மாறும் போது வாழ்வின் முன்னேற்றம் என்பது தெரியவரும். வாசிப்பு மற்றும் எழுதுதலை தாண்டி எழுத்தறிவு என்பது செல்கிறது என தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். எழுத்தறிவு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.


