இன்றைய காலகட்டத்தில் மாறுபட்ட உணவு வழக்க முறையால் தற்போதைய வயதிற்கு ஏற்ப உடல்வாகு இருப்பதில்லை. இதனால் ஏகப்பட்ட உடல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதிலேயே டயாபடீஸ் வந்துவிடுகிறது. இதனை எல்லாம் தவிர்க்க உடற்பயிற்சி ஜிம் என்று சென்றாலும் சரி வர உணவு பழக்க வழக்கத்தை பின்பற்ற வேண்டும். இன்றைய சூழலில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவது கிடையாது.
உடல் எடையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் உடற்பயிற்சியுடன் சாப்பிடும் உணவில் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். அத்துடன் இயற்கையான வழிமுறையை கடைபிடிக்கும் பொழுது உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.
தேவையான பொருள்கள்
மருதம்பட்டை பொடி 50கி
லவங்கப்பட்டை பொடி 50கி
அருகம்புல் பொடி 50கி
வாழைத்தண்டு பொடி 50கி
சீரக தூள் 50கி
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.
அதனை வாங்கி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
காலை மாலை என இருவேளையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் என கலந்து குடித்து வரவேண்டும்.
இவ்வாறு பதினைந்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கட்டாயம் உடல் எடை குறையும்.
அதுமட்டுமின்றி அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்தாக செயல்படும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.





