புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஆகியவை குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்தது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் என இருதரப்பிலும் அமளியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கிய நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை இழந்ததன் முடிவில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
அதன்படி நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மதியம் 12 மணியளவில் தொடங்கிய விவாதத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் தொடங்கியது. மக்களவையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து உரையாற்றினார்.
இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கூடிய நிலையில் ஆபரேஷன் சிந்து குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி விவாதிக்க கோரிக்கை விடுத்தனர்.
மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிகள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி எம் பி களின் தொடர் அமளியால் 2:00 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் அறிவித்திருந்தார். 2 மணிக்கு மேல் சபை தொடரும் என அறிவித்திருந்தார்.