மதுரை: காதல் திருமணம் செய்து கொண்டு பட்டியலின பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பட்டியலின பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண் ஊழியர் கணவன் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும், மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை வண்டியூர் மாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ராஜா கிருஷ்ணம்மாள் தம்பதி. இவர்களின் மகள் பொறியியல் பட்டதாரி மணிமேகலை.
மதுரை சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர் லெனின் கருப்பசாமி. இவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 1 வயது குழந்தையை உள்ள நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக மணிமேகலை பணிபுரிந்து வருகிறார். கருப்பசாமி அளித்த தகவலின் பேரில் மணிமேகலையை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது மணிமேகலையின் குடும்பத்தாரிடம் மணிமேகலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் மணிமேகலையின் குடும்பத்தாருக்கு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மணிமேகலையின் உறவினர், “பட்டியல் சமூகத்தை சேர்ந்த மணிமேகலையே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லெனின் கருப்பசாமி என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டதால் தனியாக வசித்து வந்தனர்.
மணிமேகலையின் தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாக பெண்ணின் கணவர் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசி துன்புறுத்தியுள்ளார். மணிமேகலை எங்களிடம் கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்”. ஜூன் 22ஆம் தேதி காலையில் மணிமேகலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தற்கொலையில் கணவனின் மீது சந்தேகம் இருப்பதாக அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நியாயம் கிடைக்காவிட்டால் சடலத்தை பெற மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.