தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரங்களாக வலம் வரக்கூடிய பலரும் தங்களுடைய திரைப்படங்களில் அல்லது பிறருடைய திரைப்படங்களில் தங்களுடைய முகங்களை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருப்பர். ஆனால் இவர்கள் கூட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்களா என பலரும் ஆச்சரியப்படக் கூடிய வண்ணம் ஒரு சிலரை குறித்து தான் இந்த ஒரு சிலரை குறித்து தான் இந்த தொகுப்பில் காணப் போகிறோம்.
முதலில் இயக்குனர் கே பாலச்சந்தர் :-
மறைந்த இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்கள் தன்னுடைய இயக்கத்தில் பல படங்களை வெற்றிக்கான செய்திருக்கிறார். இயக்கத்தில் மட்டுமல்லாத திரைக்கதையிலும் ஒளிப்பதிவிலும் தன்னுடைய முத்திரையில் பதித்திருக்கிறார். இப்படிப்பட்ட இவர் நிஜ வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி வெளியான காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
இயக்குனர் சங்கர் :-
பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து பிரம்மாண்டமான திரைப்படம் என்றாலே அது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியானது தான் என்று கூறும் அளவிற்கு படங்களை எடுப்பதில் வல்லவராக இருந்த இவர் எஸ் ஏ சி அவர்களின் உதவியக்குனராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இவருடைய படைப்பில் வெளியான திரைப்படங்கள் இவருடைய பெயரை பல ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடியதாக அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட இயக்குனர் சங்கர் அவர்கள் கே பாலச்சந்தர் அவர்களுடன் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?? படம் பார்த்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு
✓ இயக்குனர் வெற்றிமாறன் :-
இயல்பான கதைக்களம் உணர்ச்சிகளை உள்ளபடியே வெளிப்படுத்தும் வகையில் இவர் இயக்கக்கூடிய திரைப்படங்கள் ஆனது ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை சந்தித்து வருகிறது. வெற்றி இயக்குனர்களாக இருக்கக் கூடியவர்கள் ஒரு காலகட்டத்தில் மற்றொரு வெற்றியை இயக்குனரின் வழியில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர்கள் தான் அப்படித்தான் இவரும். பாலு மகேந்திரா அவர்களின் கைவண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இவருடைய படங்கள் அமைந்திருப்பது குரு சிஷ்யன் இடையேயான உன்னதமான புரிதலை வெளிப்படுத்துகிறது. கடந்தாண்டு நடிகர் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் வெற்றிமாறன் அவர்கள் இயக்குனராக நடித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்ததோடு நல்ல வரவேற்பையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.