பெங்களூரு: சின்னத்திரை நடிகை மஞ்சுளா குடும்ப தகராறு கணவரால் கத்திக்குத்து பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அனுமந்தநகர் அருகிலுள்ள ஸ்ரீநகரில் மஞ்சுளா மற்றும் அம்பரீஷ் தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மஞ்சுளா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.
தம்பதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு மஞ்சுளாவின் கண்ணில் மிளகாய் தூளை போட்டு கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று உள்ளார் கணவர். இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனுமந்த நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், நடிகையாக இருப்பதால் அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியில் சென்று விடுவார். மகள்களை கண்டு கொள்வதே இல்லை மகள்கள் மீது அன்பு மக்களையும் கிடையாது. அதனால் நான் தான் மகள்களை கவனித்து வருகிறேன்.
இது மட்டுமல்லாது குடும்ப பொறுப்புகளையும் நானே பார்த்து வருகிறேன். படப்பிடிப்புக்கு செல்கிறேன் என கூறிவிட்டு மதுபான விடுதிகளுக்கு செல்வதும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று கூத்தடிப்பது என இதே வேலையாக வைத்துள்ளார்.
15 நாட்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்க்கு சென்றார். ரூ. 25 லட்சம் கொடுத்து வசிக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மஞ்சுளா. மேலும் எங்களைப் பிரிந்து அண்ணன் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளான நான் மஞ்சுளா உடன் ஏற்பட்ட தகராறு மஞ்சுளாவை கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தார் அம்பரீஷ். விசாரணைக்குப் பின் அம்பரீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.