ஐந்து எழுத்து மந்திரத்தை கொண்ட சிவபெருமான் எந்த ஒரு காரியத்தையும் காரணமின்றி புரிய மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சிவபெருமான் ஏன் தமிழ் முதல் கடவுள் ஆன பிள்ளையாரின் தலையை கொய்தார்? என்ற தொகுப்பை இந்த பதிவில் காணலாம். சிவனப்பன் மக்களை காப்பதற்காக பல நாட்கள் பார்வதி தேவியை தனியே விட்டுச் செல்வதுண்டு. அவர் அவ்வாறு செல்லும்போது அவரை தேடி பல தேவர்களும், பூதகணங்களும் வருவதுண்டு. இதனால் பார்வதி அம்மா நீராடச் செல்லும் போது நந்தி கணத்தை முன்னிறுத்தி யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே! என்று கட்டளையிட்டுள்ளார். ஒருமுறை அம்மா குளிக்க செல்லும் போது அங்கு வந்த சிவன் உள்ளே செல்ல முற்பட்டு உள்ளார். இதுவே அவர் கணபதி உருவாவதற்கான திருவிளையாடலின் ஆரம்பம்.
அவர் உள்ளே செல்ல முற்பட்ட போது, நந்தி தடுத்துள்ளார். ஆனால், தலைவனோ பார்வதி என் துணைவி! அதனால் அவர் கட்டளை என்னிடம் செல்லுபடி ஆகாது! என்று கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். உள்ளே வந்த சிவனை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி நான் நந்தியிடம் யாரையும் உள்ளே அனுமதிக்காதே! என்றல்லவா கூறினேன் என்றுள்ளார். அதற்கு சிவனும், நீ என் மனைவிதான் உள்ளே குளிக்கிறாள் என்று அனுமதி கேட்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
பார்வதி தேவி நான் கொடுத்த கட்டளையை நந்தி நிறைவேற்றவில்லையே! என்ற வருத்தத்தில், அடுத்த முறை குளிக்க செல்லும் போது, அவர் மேனிக்கு பூச இருந்த மஞ்சளையும், சந்தனத்தையும் வைத்து ஒரு அழகிய திருமகனை உருவாக்கியுள்ளார். அவருக்கு உயிரும் கொடுத்து இப்பொழுது கணபதிக்கு யாரையும் உள்ளே அனுமதிக்காதே! என்று கட்டளையிட்டு சென்றுள்ளார். இந்த முறையும் நம் தலைவன் கரெக்டாக உள்ளே வர முற்பட்டுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பாலகன், பூதகணங்களை எதிர்த்து சண்டையிட்டது மட்டுமில்லாமல் சிவனையும் எதிர்க்க துணிந்து உள்ளார். அறியா பிள்ளை அல்லவா? தொடர்ந்து அனுமதி மறுத்த பிள்ளையாரின் தலையை கொய்தெடுத்துள்ளார் அப்பன் சிவன். சுவாமி! இவன் நான் உருவாக்கிய பாலகன் என்று ஓடோடி வந்து அழுதுள்ளார் பார்வதி தேவி! அதற்கு அப்பனோ, சிறிதும் நேரம் தாளாது பூதகணங்களை அனுப்பி வடக்கே தலை வைத்து படுத்திருக்கும் உயிரின் தலையை கொய்து வர உத்தரவிட்டுள்ளார். பூதகணங்கள் கொண்டு வந்த யானையின் தலையை கணபதிக்கு பொருத்தி உள்ளார். என்ன சாமி இது! என்று கேட்ட பார்வதியிடம் தனது திருவிளையாடலை கூற ஆரம்பித்துள்ளார்.
கஜமுகாசுரன் மாகத முனிவரின் மகன். அவன் என்னை நோக்கி தவம் இருந்து தன்னை மனிதர்களுக்கு பிறந்த குழந்தையாளும், மனித உருவம் படைத்த ஒருவனாலும் தம்மை கொல்லக்கூடாது என்று வரம் வாங்கியுள்ளான். அவனிடம் சாகா வரமும் உண்டு. அதனால் தான் நான் திருவிளையாடலை நடத்தி, உன்னால் உருவாக்கப்பட்ட இம்மகனை தேர்ந்தெடுத்து இவனுக்கு யானை தலையை பொருத்தியுள்ளேன். இவனே அந்த மகாசுரனை அளிக்கப் பிறந்தவன். இக்குழந்தை முழு முதற்கடவுள் எனவும், இவரை முதலில் வணங்கியே சுப காரியங்களை நிகழ்த்த முடியும் எனவும் வரம் வழங்கி உள்ளார். அந்த மகாசுரனை கணபதி கொன்று தான் மூஞ்சூறு வாகனமாக மாற்றி அமைத்துள்ளார். ஓம் கண கணபதியே நமஹ!!!





