பெய்ஜிங்: சீன விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகளை வைத்து இனப்பெருக்கம் செய்து அறிவியல் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியினை பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் முயற்சித்த போதிலும் உருவாக்கப்பட்ட குட்டிகள் ஆரோக்கியமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “புரொசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் (PNAS)” என்ற அறிவியல் இதழில் ஜூன் 23, 2025 இல் ஆய்வானது வெளியானது.
இந்த சாதனையை ஷாங்காய் ஜியா டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக சாதனை புரிந்துள்ளனர். புதிய உயிரினம் உருவாக வேண்டுமேனில் ஆண் விந்தணு பாதி மற்றும் பெண் முட்டையின் பாதி மரபணுக்கள் இருக்க வேண்டும். ஆய்வில் விஞ்ஞானிகள் ஆன்லைனில் உடம்பிலிருந்து விந்தணுவை எடுக்காமல் “தோல் செல்” போன்ற சாதாரண செல்களை எடுத்துள்ளனர். சாதாரண ஆண் செல்லின் மரபணுக்களை சிறப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரி ப்ரோக்ராம் செய்துள்ளனர்.
“எபிஜனிட்டிக் ப்ரோக்ராமிங்” மூலம் சில மரபுணர்களை ஆன் மற்றும் சில மரபணுக்களை ஆப் செய்தும் ஆராய்ச்சியை தொடர்ந்து உள்ளனர். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ஆண் செல்ல இன்னொரு ஆண் எலியின் விந்து அணுவோடு சேர்த்து புதிய உயிரினத்தை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் எலிகளின் பயன்படுத்தி இருந்தாலும் மனிதர்களுக்கு ஒத்து வராது என கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
இதுகுறித்து கூறுகையில் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டோஃப் கலிகெட் அவர்கள் கூறுகையில் இரண்டு ஆண் அணிகளை கொண்டு புதிய எலி குட்டிகளை உருவாக்கும் ஆராய்ச்சி நம்பிக்கையாக இருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் தேவைப்படுகின்றன. இதை மனிதர்களில் பயன்படுத்த வாடகை தாய்மார்கள் அதிகம் தேவைப்படுகின்றன அதனால் மனிதர்களுக்கு பரிசு சோதித்து பார்ப்பது என்பது முடியாத காரியம் என்று கூறியுள்ளார்.