ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!! நோயாளிகளே பயப்பட வேண்டாம்!!செயற்கை ரத்தம் வந்தாச்சு!!

Synthetic blood has arrived in Japan!!
டோக்கியோ : ஜப்பான் நாட்டில்  செயற்கையான ரத்தத்தை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். செயற்கை ரத்தமானது உலகளாவிய பயன்பாடு மற்றும் சேமித்து வைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் எனவும் 2030 அவசர மருத்துவ சேவையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்லும் போது ரத்தம் கிடைக்காமல் சிரமப்படுவதை பார்த்திருப்போம்.
தற்போது சமூக ஊடகங்களில் இருந்து ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். மருத்துவத்தின் திருப்புமுனையாக இந்த செயற்கை ரத்தம் அனைத்து இரத்த வகையினருக்கும் பொருந்தக் கூடியதாக கூறுகிறார்கள்.
பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமை குழு இரண்டு ஆண்டுகள் கெட்டுப்போகாத ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளனர். கெட்டுப்போன ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினை பிரித்து இந்த ரத்த வகை தயாரிக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். செயற்கை ரத்தத்திற்கு 42 நாட்கள் ஆயுட்காலமாக இருக்கும். மேலும், ரத்தம் பெறுபவர்கள் அவர்களின் இரத்த வகையுடன் பொருந்துமா என மருத்துவ பரிசோதனை செய்து பின் ரத்தத்தை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பொது செயற்கை ரத்தம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் 2030ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் என்றும், அவசர மருத்துவ உதவிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ரத்தம் கிடைக்காமல் அல்லல்படும் நோயாளிகளுக்கு இது மிகப்பெரிய வரபிரசாதமாக இருக்கும் என்றும், இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவத்தின் மிகப்பெரிய மைல் ஸ்டோனாக பார்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram