துணை ராணுவ தலைமையகம் மீது தாக்குதல்! பயங்கரவாதிகள் அட்டூழியம்!!  

Attack on paramilitary headquarters
பெஷாவர்: பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா உள்ள துணை ராணுவ படை தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்களின் பலியை தொடர்ந்து நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பன்னு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தலைமையகத்தின் பாதுகாப்பை மீற முயற்சி செய்துள்ளனர்.
மேலும், வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு கூட்டாட்சி கான்ஸ்ட்டாப்புலரி தலைமையகத்தின் பாதுகாப்பை மீறும் செயலில் ஈடுபடும் போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து ராணுவ ஊடகப் பிரிவு அதிகாரிகள் செய்தி குறிப்பில் கூறியுள்ளனர். தற்கொலை குண்டு வெடிப்பால் ராணுவப்படை தலைமையகத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், தலைமையகத்திற்கு அருகில் இருந்த பொதுமக்களின் உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் பொதுமக்களில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் உறுதியான செயல்பாட்டினால் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram