தன்னுடன் போட்டோ எடுப்பதற்காக அழைத்த பொழுது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் நடிகை மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா.
தினசரி திரைப்படம் ஆனது எதிரெதிர் எண்ணங்கள் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டு வாழக்கூடிய வாழ்க்கையானது எந்த மாதிரியான விளைவுகளை எதிர்கொள்ளும் அந்த வாழ்க்கையில் நிகழக்கூடிய சுவாரசியங்கள் என்ன என்பதை எளிமையாக எடுத்துக்காட்டக்கூடிய ஒரு திரைப்படமாக இது அமைந்திருக்கிறது.
ஜி சங்கர் இயக்கத்தில் இளையராஜாவின் உடைய இசையில் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை சிந்தியா நடிப்பில் உருவான இத்திரைப்படம் எடுக்கப்படும் பொழுது நடந்த ஒரு சுவாரசியமான தகவல்களை தயாரிப்பாளர் மற்றும் நடிகையான சிந்தியா பகிர்ந்திருப்பதாவது :-
படப்பிடிப்பு தளத்தில் தினசரி படத்திற்கான ஐந்து பாடல்களைப் பற்றி இளையராஜாவுடன் தான் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவருடன் நிறைய புகைப்படங்கள் எடுத்ததால் ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த சிந்தியா அவர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேட்க அவரும் எடுத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.
இதனைக் கண்ட இளையராஜா அவர்கள் இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு தற்பொழுது அவருடன் சென்று புகைப்படம் எடுக்கிறாரே என பார்த்ததை அடுத்து மூவரும் இணைந்து புகைப்படம் எடுப்போம் என நடிகை சிந்தியா கேட்டிருக்கிறார். அதன்பின் மூவரும் இணைந்து புகைப்படம் எடுக்கும் பொழுது சிந்தியா யாரின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பது என்ற குழப்பம் ஏற்படவே இசைஞானி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக அதாவது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த நடிகை சிந்தியா நான் நின்றபடியே நிற்கிறேன் இப்படியே போட்டோ எடுக்கலாம் எனக் கூறி இளையராஜாவினுடைய மேனேஜரிடம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
திரை உலகின் உச்ச நடிகர் மற்றும் திரை உலகின் உச்ச இசையமைப்பாளர் என உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய இருவரும் ஒரு பெண்ணுடன் போட்டோ எடுப்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது யாராலும் ஏற்க முடியாது ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.





