திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்துள்ளனர். அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலி ஆதார் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி வசித்து வருவதாக தகவல் கிடைத்ததன் படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக வசித்து வந்த 26 பேரை கண்டுபிடித்தனர். அதன்படி டிகேடி பகுதியில் ஆதார் கார்டுகளை பயன்படுத்தி பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் போலீசார் அவர்களை கைது செய்து மேலும் போலி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று கடந்த ஜூன் 15ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கதேசத்தை சேர்த்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி சென்னிமலையில் 4 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் சிலர் குடியிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
சென்னிமலை பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்ததாக தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கதேசத்தினர் குடியேறி உள்ளதாக கிடைத்த தகவலின் படி போலீசார் கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் திருப்பூரில் 26 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை போலீசார் கைது செய்ததில் 66 பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். இதில் 20 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் மற்றும் குழந்தைகள் 30 என கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த போலி ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தது. மேலும், இதுவரை கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.