மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றக் கோரி நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் குறித்து, ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சட்டத்தின் ஊழியன் நான்: மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறை நடந்து கொள்ளும் விதம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நான் மட்டும் இப்போது மதுரை கமிஷனராக இருந்திருந்தால், நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். ‘நான் சட்டத்தின் ஊழியர், அரசாங்கத்தின் ஊழியர் அல்ல’ என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கே ஒரு மெயில் அனுப்பி இருப்பேன்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவே இறுதி: தொடர்ந்து பேசிய அவர், “நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதை 100 சதவீதம் நிறைவேற்றுவதுதான் ஒரு நேர்மையான அதிகாரியின் கடமை. அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து சட்டத்தை வளைக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், அதை நிறைவேற்றத் தயங்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
பரபரக்கும் அரசியல் களம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல், இப்போது நேரடியாக முதலமைச்சரைக் குறிப்பிட்டுப் பேசியிருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஆன்மீக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவரது இந்தப் பேச்சுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
“அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறக் கூடாது” என அவர் பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது? என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும்.
அதுக்குள்ள ஏறிடுச்சா?? தங்கம் விலை
இன்னும் குறையல.. அதுக்குள்ள ஏறிடுச்சா?? தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும்!!




