சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியலில் தற்போதுள்ள சூழலில், எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல. தனியாகத் தேர்தலில் நிற்பதை விட, ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணியில் நின்றால் வெற்றி என்பது எளிதாகக் கிட்டும். இது இப்போது புதிதாகக் கட்சித் தொடங்கியுள்ள தம்பி விஜய்க்கும் பொருந்தும்,” என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்குப் பிறகு, விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற விவாதம் நீடித்து வருகிறது. இந்நிலையில், “அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம்” என்ற தொனியில் தமிழிசை பேசியிருப்பது, பாஜக – அதிமுக – தவெக போன்ற கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திமுக என்ற ஒரு பெரிய சக்தியை வீழ்த்த வேண்டுமானால், வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதே தமிழிசையின் கருத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, பியூஸ் கோயல் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற்ற நிலையில், தமிழிசையின் இந்த ‘கூட்டணி தத்துவம்’ 2026 தேர்தலுக்கான அஸ்திவாரமாகவே கருதப்படுகிறது.
நான் ஒன்றும் முட்டாள் அல்ல!! கூட்டணி குறித்துத் திருமாவளவன் ஆவேசம்!! 2026-ல் பெரிய ட்விஸ்ட்??





