இஸ்லாமாபாத்: துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இளம் வீரர்கள் மீது பரிசு மழையையும், பாராட்டுகளையும் அந்நாட்டு அரசாங்கம் பொழிந்து வருகிறது.
பிரதமர் அளித்த இன்ப அதிர்ச்சி: சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்குப் பாராட்டு விழா இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், வெற்றி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், இந்தியாவை வீழ்த்தி நாட்டுக்கு பெருமை சேர்த்த இளம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி பாகிஸ்தான் ரூபாய் (10 Million PKR) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
பிசிபி (PCB) அறிவித்த தனிப்பரிசு: பிரதமரின் அறிவிப்பு ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி ஏற்கனவே ஒவ்வொரு வீரருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் மூலம், ஆசியக்கோப்பையை வென்ற கையோடு அந்த அணியின் வீரர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
விளையாடிய விதம்: இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸின் அதிரடியான 172 ரன்கள் உதவியுடன் 347 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 156 ரன்களுக்கே சுருண்டது. இந்த மிகப்பெரிய வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
“இளம் வீரர்களை ஊக்குவிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் வலுவாகும்” எனப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
CSK-வின் மெகா பிளான்!! எங்கள் முதல் தேர்வே பிரசாந்த் வீர் தான்!! CEO-காசி விஸ்வநாதன் விளக்கம்!!


